/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு நுாதன தண்டனை
/
பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு நுாதன தண்டனை
பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு நுாதன தண்டனை
பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு நுாதன தண்டனை
ADDED : நவ 01, 2025 03:26 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைக் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில், 3 மாதம் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் சிறுவன் ஈடுபட இளம் சிறார் கோர்ட் உத்தரவிட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் குமார், 36; கடந்த 2020ம் ஆண்டு, ஜனவரி 5ம் தேதி, விழுப்புரம் வந்த அவர், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விராட்டிக்குப்பம் பைபாஸ் சாலை சந்திப்பு அருகே நடந்து சென்றார்.
அப்போது, பைக்கில் வந்த விழுப்புரம் பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுவன், குமார் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதால், அவர் பலத்த காயமடைந்தார்.
இது குறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார், சிறுவன் மீது வழக்கு பதிந்தனர்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் இளம் சிறார் கோர்ட்டில் நடந்து வந்தது.
நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரகாசபூபதி, விபத்தை ஏற்படுத்திய சிறுவன், இன்று முதல் வரும், 2026ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், விழுப்புரம் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து, போக்குவரத்து சீர் செய்யும் பணியினை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

