/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் கல்லுாரியில் என்.சி.சி., துவக்க விழா
/
மயிலம் கல்லுாரியில் என்.சி.சி., துவக்க விழா
ADDED : அக் 16, 2025 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் அக். 17-: மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லுாரியில் என்.சி.சி., துவக்க விழா நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கினார்.
கல்லுாரி செயலாளர் ராஜ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கல்லுாரி உதவி பேராசிரியர் சதீஷ் வரவேற்றார்.
என்.சி.சி.,யை கமாண்டிங் ஆபீசர் சக்கரபர்த்தி துவக்கி வைத்து பேசினார். இதில் கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு, லெப்டினல் கார்னல் நாராயணன் ஸ்ரீ தேவசேனா ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியை உதவி பேராசிரியர் மகாலட்சுமி தொகுத்து வழங்கினார்.