ADDED : அக் 16, 2025 11:26 PM
திருவெண்ணெய்நல்லுார்: உளுந்தூர்பேட்டை அருகே கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.
உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு, கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் சிவகுமார் தலைமை தாங்கினார். அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.
போராட்டத்தில் மேப்புலியூர் ஊராட்சி தலைவரால் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள ஓ.எச்.டி., ஆப்பரேட்டர் சிவக்கொழுந்து, செம்மனந்தல் ஊராட்சியில் துாய்மைப் பணியாளர் தனலட்சுமி ஆகியோருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். துாய்மைப் பணியாளர்களுக்கான நிலுவைத் தொகையை உடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.