/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தே.மு.தி.க., நலத்திட்ட உதவி வழங்கல்
/
தே.மு.தி.க., நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : ஆக 25, 2025 11:17 PM

விழுப்புரம்:
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழுப்புரம் காந்தி சிலை அருகே, வடக்கு நகர தே.மு.தி.க., சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. வடக்கு நகர செயலாளர் மணிகண்டன் ஏற்பாட்டின்பேரில், மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கி 73 ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை மற்றும் 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார். நகர தலைவ ர் சிவா வரவேற்றார்.
தெற்கு நகர செயலாளர் இளையராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதவன்முத்து, முருகன் முன்னிலை வகித்தனர்.
நிர்வாகிகள் ரவி, சீனிவாசன், செல்வா, கணேசன், உதயா, மணிமாறன், வேம்பு மயிலப்பன், வடிவேல் மதன், கோபி, சுபாஷ், ஆனந்த், சீத்தாபதி, விஜயராகவன், உமா, அன்பு, சாதிக்பாஷா, கோபி, மணிகண்டன், மதன், நித்யா, ராணி, சுந்தரபாண்டி, கார்த்தி, பரணி உட்பட பலர் பங்கேற்றனர்.