/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உடையாநத்தம் பகுதியில் கற்கால ஓவியங்கள் கண்டுபிடிப்பு
/
உடையாநத்தம் பகுதியில் கற்கால ஓவியங்கள் கண்டுபிடிப்பு
உடையாநத்தம் பகுதியில் கற்கால ஓவியங்கள் கண்டுபிடிப்பு
உடையாநத்தம் பகுதியில் கற்கால ஓவியங்கள் கண்டுபிடிப்பு
ADDED : ஜன 12, 2025 10:18 PM

கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் அடுத்த உடையாநத்தம் பகுதியில் புதிய கற்கால ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த கீழ்வாலை ஊராட்சிக்கு அருகில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதன் வரைந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.இது தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மேலும் அதே போன்று கீழ்வாலை அடுத்த உடையாநத்தம் ஏரிக்கரை அருகே உள்ள குடைப்பாறையில் புதிய ஓவியங்கள் உள்ளதை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவு மையத்தைச் சேர்ந்த பாலமுருகன், பழனிச்சாமி, சரவணகுமார் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.
குடைப் பாறையின் ஒரு பகுதியில் வட்ட வட்டங்களாக கோடுகள் வரையப்பட்டு செஞ்சாந்து வண்ணத்தில் வரையப்பட்டுள்ளது.அதன் அருகே மான் அல்லது விலங்கு ஒன்று நீர் அருந்த வருவது போலவும் உள்ளது.இதே பாறையில் பல ஓவியங்கள் உள்ளதைக் காணமுடிகிறது.
இங்குள்ள காட்சிகள் மற்றும் வரைவு முறைகளை வைத்து பாரக்கும்போது இவை பெருங்கற்காலத்திற்கு முந்தைய புதிய கற்கால ஓவியங்களாக இருக்க கூடும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
கண்டாச்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான கீழ்வாலை, உடையாநத்தம், ஆலம்பாடி போன்ற பகுதிகளில் காணப்படும் பாறை ஓவியங்கள் முக்கியமான ஆதாரங்களாக விளங்குவதால் இதனை அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு தொல்லியல் சின்னங்கள் மற்றும் ஓவியங்கள் குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.