/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வழுதாவூர் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ.38 கோடி செலவில் புதிய தடுப்பணை
/
வழுதாவூர் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ.38 கோடி செலவில் புதிய தடுப்பணை
வழுதாவூர் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ.38 கோடி செலவில் புதிய தடுப்பணை
வழுதாவூர் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ.38 கோடி செலவில் புதிய தடுப்பணை
ADDED : நவ 09, 2025 05:41 AM
கண்டமங்கலம்: வழுதாவூர் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசன் கூறியதாவது:
வழுதாவூர் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முட்ரம்பட்டு- குமாரப்பாளையம் சாலையில் 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ேமம்பாலம் அமைக்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
கண்டமங்கலம் ஒன்றியத்தித்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் புதிதாக 636 வீடுகள், 441 வீடுகள் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்படி 18.14 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளும், 12.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை பணிகளும், 5.19 கோடி ரூபாயில் பள்ளி கட்டடங்கள், வானுார் மற்றும் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 6.66 கோடியில் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.
நமக்கு நாமே திட்டத்தின்படி, 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 பணிகள், 6.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 165 பணிகள், 92.85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 18 பணிகள் நிறைவேற்றப்பட்டன.
இதேபோல், பொது சுகாதார மையம், சாலை மேம்பாட்டு பணிகள், நீர்நிலைகள் மேம்பாட்டு பணிகள், நபார்டு திட்டத்தின் படி புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 4.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118 புதிய வீடுகள், பழங்குடியினருக்கு 10 வீடுகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நபார்டு வங்கி மூலம் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 புதிய உயர் மட்ட பாலம் உள்ளிட்ட ஏராளமான வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளது.
இவ்வாறு வாசன் கூறினார்.

