/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
200 பெண்களுக்கு தையல் இயந்திரம் சமூக நலத்துறை நடவடிக்கை
/
200 பெண்களுக்கு தையல் இயந்திரம் சமூக நலத்துறை நடவடிக்கை
200 பெண்களுக்கு தையல் இயந்திரம் சமூக நலத்துறை நடவடிக்கை
200 பெண்களுக்கு தையல் இயந்திரம் சமூக நலத்துறை நடவடிக்கை
ADDED : நவ 08, 2025 02:13 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் 200 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோருக்கு, இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற அரசு இ-சேவை மையங்கள் மூலம் இணையதள வழியில் விண்ணப்பங்கள் பெற்றப்படுகின்றன. இதுவரை வரபெற்ற விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, 200 பேருக்கு தையல் இயந்திரங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.