/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் துவக்கம்
/
புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் துவக்கம்
ADDED : ஜூலை 06, 2025 04:34 AM

வானூர்: வானுார் தொகுதிக்குட்பட்ட கிளியனுார் மேற்கு ஒன்றிய திமுக., சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்து பேசினார்.
ஒன்றிய செயலாளர்கள் ராஜி, புஷ்பராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., மாரிமுத்து முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா, மாவட்ட பிரதிநிதி குழந்தைவேலு, மாவட்ட கவுன்சிலர்கள் பிரேமா குப்புசாமி, கவுதம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தேவேந்திரன், மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் வேலு, ஒன்றிய துணை செயலாளர்கள் குப்புசாமி, அய்யம்மாள் சுப்பிரமணி, பொருளாளர் பழனி, ஊராட்சிமன்ற தலைவர்கள் சிவக்குமார், சித்ரா, ஒன்றிய துணை சேர்மன் பர்வகீர்த்தனா விநாயகமூர்த்தி, இளஞர் அணி அமைப்பாளர் செந்தில், கவுன்சிலர் செல்வக்குமார், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கலியபெருமாள், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் உத்திரகுமார், தொகுதி ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், ஐ.டி., பிரிவு அமைப்பாளர் பிரசாத், கிருபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.