/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு புதிய மோப்ப நாய் வருகை
/
போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு புதிய மோப்ப நாய் வருகை
போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு புதிய மோப்ப நாய் வருகை
போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு புதிய மோப்ப நாய் வருகை
ADDED : டிச 30, 2025 05:12 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் துறைக்கு, போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு புதிய மோப்ப நாய் வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட காவல் துறையில், குற்றப்பிரிவு மற்றும் வெடிகுண்டு கண்டறியும் போலீசாருக்கு உறுதுணையாக, 2 துப்பறியும் மோப்ப நாய்கள் உள்ளன. தற்போது, இதனுடன், போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உதவியாக பஸ்டர் என்ற மோப்ப நாய் வழங்கப்பட்டுள்ளது. போதை பொருள்கள் கண்டறியும் சோதனைக்கும், போதை பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறி பிரிவு போலீசார் சோதனைக்கு பயன்படுத்துவதற்காக, இந்த பஸ்டர் மோப்ப நாய் காவல் துறை சார்பில் தேர்வு செய்யப்பட்டு, கடந்த ஓராண்டாக துப்பறியும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, விழுப்புரம் மாவட்ட காவல் துறைக்கு, இந்த பஸ்டர் மோப்ப நாய் நேற்று வழங்கப்பட்டது. விழுப்புரம் எஸ்.பி., சரவணன், மோப்ப நாய் பஸ்டரை பார்வையிட்டு, போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் பிரிவினரிடம் வழங்கினார். தனி பிரிவு இன்ஸ்பெக்டர் பிரகாஷ், சப் இன்ஸ்பெக்டர் ரங்கராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

