/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ. 3.50 கோடியில் புதிய தார் சாலை பணி விரைவில் துவக்கம்
/
ரூ. 3.50 கோடியில் புதிய தார் சாலை பணி விரைவில் துவக்கம்
ரூ. 3.50 கோடியில் புதிய தார் சாலை பணி விரைவில் துவக்கம்
ரூ. 3.50 கோடியில் புதிய தார் சாலை பணி விரைவில் துவக்கம்
ADDED : அக் 05, 2025 11:05 PM
வானுார்: தினமலர் செய்தி எதிரொலியாக, ராயப்பேட்டையில் இருந்து ஆப்பிரம்பட்டு வழியாக நெசல் வரை ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கப்பட உள்ளது.
வானுார் தொகுதியில் உள்ள ராயப்புதுப்பாக்கம், ஆப்பிரம்பட்டு, நெசல் ஆகிய கிராமங்களில், ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதிமக்கள் புதுச்சேரி, ஆரோவில், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, வானுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு பல்வேறு பணிகளுக்கு சென்று வருகின்றனர்.
குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள் புதுச்சேரி, வானுார் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று படித்து வருகின்றனர். மேலும், சஞ்சீவிநகர், ஆலங்குப்பம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராம மக்களும், காலாப்பட்டு, கனகசெட்டிக்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, இந்த சாலை வழியாக தான் சென்று வருகின்றனர்.
ராயப்பேட்டையில் துவங்கி ஆப்பிரம்பட்டு, நெசல் வரை உள்ள 4.5 கி.மீ., துார தார் சாலையில் ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது.
மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
இது குறித்து சில மாதங்களுக்கு முன், தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக மாவட்ட நிர்வாகம், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ராயப்பேட்டையில் இருந்து நெசல் வரை ரூ. 3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து, டெண்டர் விடப்பட்டுள்ளது.
இந்த சாலை அமைக்கும் பணி விரைவில் துவங்கும் என ஒன்றிய பொறியாளர் தெரிவித்தார்.