/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
/
மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
ADDED : அக் 05, 2025 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் டவுன் போலீசார் நேற்று முன்தினம் மாலை மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, புதுச்சேரியிலிருந்து பைக்கில் வந்த இரண்டு பேரை சந்தேகத்தின் பேரில், நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 58 புதுச்சேரி மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக புதுச்சேரி அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த எத்திராஜ், 29; வானுார் அருகே உள்ள தொள்ளாமூர் கிராமத்தை சேர்ந்த தன்சிங், 25; ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.