/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதிய டவுன் ஹால்: கலெக்டர் ஆய்வு
/
புதிய டவுன் ஹால்: கலெக்டர் ஆய்வு
ADDED : ஏப் 04, 2025 04:33 AM

விழுப்புரம்: விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலக பகுதியில், புதிய டவுன் ஹால் அமைக்கும் திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலக கட்டடத்தை அகற்றிவிட்டு, 2 கோடி ரூபாய் மதிப்பில் புதிய டவுன் ஹால் கட்டுவது தொடர்பாக கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேற்று அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.
புதிய டவுன் ஹாலில் வணிக வளாகம், சுப நிகழ்ச்சி நடத்துமிடம், கூட்டரங்கம், சமையலறை, சுகாதாரமான குடிநீர் வசதி, கழிவறை வசதி, உயர்கோபுர மின் விளக்கு வசதி, வாகன நிறுத்துமிடம், ஜெனரேட்டர் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான பணிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களிடம் விரிவாக கேட்டறியப்பட்டு, பணிகள் தொடர்பான அறிவுரை மற்றும் ஆலோசனைகளை கலெக்டர் வழங்கினார்.
இதனையடுத்து, விழுப்புரம் நகராட்சி பூங்காவில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்து, மின் விளக்குகள், சுகாதாரமான குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்டவற்றினை ஏற்படுத்தி தரவும், நாள்தோறும் பூங்காவினை துய்மைப்படுத்தி சுகாதாரமான முறையில் வைத்துக்கொள்ளவும், நகராட்சி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, நகராட்சி கமிஷனர் வசந்தி, நீர்வளத்துறை உதவி செயற் பொறியாளர் ரமேஷ், நகராட்சி உதவி பொறியாளர் ராபர்ட் சுகாதார அலுவலர் ஆல்பர்ட் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.