ADDED : ஏப் 24, 2025 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் சாய் லட்சுமி நகரில் குறைந்த மின் அழுத்தம் பிரச்னையை சரிசெய்ய, புதியதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.
திண்டிவனம் நகராட்சி 15வது வார்டு பெலாக்குப்பம் ரோடு, சாய் லட்சுமி நகர், வெங்கடாஜலபதிநகர், கங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில், குறைந்த மின்அழுத்தம் காரணமாக மின்சாதன பொருட்கள் பழுதடைந்து வந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் மின்துறையை கண்டித்து,  மலர் வளையம் வைக்கும் போராட்டம் அறிவித்தனர்.
மின்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாய்லட்சுமி நகரில் புதியதாக டிரான்ஸ்பார்மர் பொறுத்தப்பட்டது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது. மின்பொறியாளர் சிவசங்கரன், உதவி செயற்பொறியாளர் செந்தில், உதவி மின்பொறியாளர் கல்பான ஆகியோருக்கு, சாய்லட்சுமி நகர் பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.

