/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
என்.எல்.சி., ஊழியர் மனைவி விபத்தில் பலி
/
என்.எல்.சி., ஊழியர் மனைவி விபத்தில் பலி
ADDED : ஏப் 04, 2025 04:35 AM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லூர் அருகே கார் கவிழ்ந்து, என்.எல்.சி., ஊழியர் மனைவி உயிரிழந்தார்.
கடலுார் மாவட்டம், நெய்வேலி 26 வது பிளாக் பகுதி சேர்ந்தவர் அழகானந் தம், 55; என்.எல்.சி., ஊழியர். நேற்று இரவு அழகானந்தம் குடும்பத்துடன் மகேந்திரா எக்ஸ்யூவி காரில் சென்னை நோக்கி சென்றார். இரவு 8:00 மணியளவில் திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள பேரங்கியூர் என்ற இடத்தில் சென்றபோது, கார் திடீரென நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அப்போது காரில் இருந்த அழகானந்தம் மனைவி சுந்தரி, 50; சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அழகானந்தம் மற்றும் அவரது மகன் அரவிந்தன் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை, திருவெண்ணெய்நல்லூர் போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

