/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எம்.எல்.ஏ.,க்களின் கருத்தை கவனிக்க ஆளில்லை: மக்கள் பிரதிநிதிகளுக்கு மதிப்பில்லையா?
/
எம்.எல்.ஏ.,க்களின் கருத்தை கவனிக்க ஆளில்லை: மக்கள் பிரதிநிதிகளுக்கு மதிப்பில்லையா?
எம்.எல்.ஏ.,க்களின் கருத்தை கவனிக்க ஆளில்லை: மக்கள் பிரதிநிதிகளுக்கு மதிப்பில்லையா?
எம்.எல்.ஏ.,க்களின் கருத்தை கவனிக்க ஆளில்லை: மக்கள் பிரதிநிதிகளுக்கு மதிப்பில்லையா?
ADDED : ஜன 24, 2025 06:58 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், தொகுதி எம்.எல்.ஏ.,க்களின் கருத்தை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என விவசாயிகள் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், செஞ்சி, விழுப்புரம், திருக்கோவிலுார், விக்கிரவாண்டி ஆகிய 4 தொகுதிகளில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். திண்டிவனம், வானுார் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க.,வும், மயிலம் தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வும் வெற்றி பெற்றது.
மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாக்களுக்கு. எதிர்க்கட்சியை சேர்ந்த தங்களை முறைப்படி அழைப்பதில்லை என அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் புகார் கூறி வருகின்றனர்.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், விழுப்புரம் அரசு சட்டக் கல்லுாரியில், தமிழக அரசின் தவப்புதல்வன் திட்ட விழா நடைபெற்றது.
விழாவிற்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். அப்போதைய அமைச்சர் மஸ்தான் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு உதவித்தொகையை வழங்கினார். இதில், எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, மணிக்கண்ணன், சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி, அர்ச்சுணன் பங்கேற்கவில்லை.
இது பற்றி அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, 'இரு எம்.எல்.ஏ.,க்களுக்கும் ஒரு நாள் முன்னதாக (ஆக.8 ம் தேதி) தகவல் தெரிவிக்கப்பட்டது. இருவரும் வரவில்லை' என தெரிவித்தனர்.
இது பற்றி எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி, அர்ச்சுணன் ஆகியோரிடம் கேட்டபோது, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை, அரசு நிகழ்ச்சிகளில் புறக்கணித்து வருகின்றனர். பெயரளவிற்கு தகவல் தெரிவிப்பார்கள். சில நேரம், நிகழ்ச்சி முடிந்த மறுநாள் அழைப்பு அனுப்புகின்றனர்.
வானுார் தொகுதியில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அப்போதைய அமைச்சர் சண்முகம் பரிந்துரையின்பேரில், புதிய அரசு கலைக் கல்லுாரிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அரசு கலைக் கல்லுாரி திறப்பு விழாவில், தொகுதி எம்.எல்.ஏ., பெயர் புறக்கணிக்கப்பட்டதாக சக்கரபாணி எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
தற்போது, ஆளுங்கட்சி எம்.எம்.ஏ.,க்களையும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்ற பேச்சு எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், தங்களது தொகுதிக்குட்பட்ட சில கிராமங்களில், நேரடி கொள்முதல் நிலையம் அமைக்குமாறு, அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். விவசாயிகள் கேட்டுக் கொண்ட பகுதிகளில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க, எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரை செய்த பல கிராமங்கள், பட்டியலில் விடுபட்டுள்ளன.
தொகுதி எம்.எல்.ஏ.,விடம் அளித்த மனுக்களை அதிகாரிகள் பரிசீலனை செய்யவில்லை என்றும், மக்கள் பிரநிதிகளின் கருத்தைக் கேட்காமல் தன்னிச்சையாக நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
வழக்கமாக எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரைகள் தான் கிடப்பில் போடப்படும். தற்போது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களின் சார்பில் பரிந்துரை செய்த கிராமங்களில் கூட, நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படாதது, அதிர்ச்சியளிப்பதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இதே நிலையில்தான், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தரப்பிலும் ஆதங்கப்படுகின்றனர்.

