/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
/
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
ADDED : அக் 16, 2024 05:04 AM

விக்கிரவாண்டி : வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து தாலுகா அலுவலகங்களில் கண்காணிப்பு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
விக்கிரவாண்டி பேரூராட்சியில் தாலுகா கண்காணிப்பு அதிகாரி சந்திரசேகர் தலைமையில் நடந்த கூட்டத்தில், முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, நேற்று மழைநீர் அதிகளவில் தேங்கும் பகுதிகளான குத்தாம்பூண்டிரோடு, வெங்கடேஸ்வரா நகர், பஸ் நிலையம், கக்கன் நகர், ரெட்டிக்குப்பம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சந்திரசேகர் ஆய்வு செய்தார்.
தாசில்தார் யுவராஜ், பி.டி.ஓ.,க்கள் பாலச்சந்திரன், குேலாத்துங்கன், வருவாய் ஆய்வாளர்கள், தீயணைப்பு, மின்வாரியம், சுகாதாரம், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
செஞ்சி
செஞ்சி தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வளர்மதி தலைமை தாங்கினார். தாசில்தார் ஏழுமலை முன்னிலை வகித்தார். மின்வாரியம், தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
செஞ்சி தாலுகாவில் மழை பாதிப்பை எதிர்கொள்ள மின் வாரியத்தினர் 24 மணி நேரமும் பணியில் இருந்து கண்காணிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏரி, குளங்களில் உடைப்பு ஏற்பட்டால் எதிர்கொள்ள மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
செஞ்சி தாலுகா அலுவலகத்தில் 24 மணி நேரமும் அவசரகால கட்டுப்பாட்டு அறை செயல்படும். மழை பாதிப்பு குறித்து பொது மக்கள் 04145-222007 என்ற தொலைபேசி எண்ணிலும், 94450 00524 என்ற மொபைல் எண்ணிலும் தெரிவிக்கலாம்.
வானுார்
வானுார் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, பருவமழையை ஒட்டி, அனைத்து உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஏரி, குளங்கள் உடையாமல் இருக்க பலப்படுத்த வேண்டும். தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அவர்களுக்கு உணவுகள் சரியான நேரத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
கூட்டத்தில், தாசில்தார் நாராயணமூர்த்தி, மண்டல அலுவலர் தமிழரசன், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடபதி, தலைமையிடத்து துணை தாசில்தார் வெங்கடாஜலபதி, மண்டல துணை தாசில்தார் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.