/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வடகிழக்கு பருவ மழை ஆலோசனை கூட்டம்
/
வடகிழக்கு பருவ மழை ஆலோசனை கூட்டம்
ADDED : அக் 18, 2024 07:22 AM

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சியில் வடகிழக்கு பருவமழை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
நகராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கமிஷனர் குமரன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது கவுன்சிலர்கள், மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். நீர் வரத்து வாய்க்கால்களை துார் வார வேண்டும், பழுதடைந்துள்ள தரைப்பாலங்களை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து, திண்டிவனம் செஞ்சி சாலையில் உள்ள ராஜாங்குளத்திற்கு வரும் வெள்ளவாரி வாய்க்கலை நகர மன்ற தலைவர், கமிஷனர் ஆய்வு செய்தனர்.