/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
என்.எஸ்.எஸ்., திட்ட முகாம் : மரக்கன்று நடும் நிகழ்ச்சி
/
என்.எஸ்.எஸ்., திட்ட முகாம் : மரக்கன்று நடும் நிகழ்ச்சி
என்.எஸ்.எஸ்., திட்ட முகாம் : மரக்கன்று நடும் நிகழ்ச்சி
என்.எஸ்.எஸ்., திட்ட முகாம் : மரக்கன்று நடும் நிகழ்ச்சி
ADDED : அக் 03, 2025 02:07 AM

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அருகே அரசு பள்ளி மாணவர்கள் என்.எஸ்.எஸ்., முகாமில் பனை விதை நடவு மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
சங்கீதமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி என் எஸ் எஸ். மாணவர்கள் சார்பில் நங்காத்துாரில் நடந்த முகாமிற்கு என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார். விழுப்புரம் டி.எல்.ஓ., ராஜசேகரன் ஏரிக்கரையில் பனை விதை மற்றும் மரக்கன்றுகளை நட்டார்.
பள்ளி மாணவர்கள் நங்காத்துார் சிவன் கோவிலில் கிராம பிரமுகர் முருகதாஸ் தலைமையில் உழவாரப் பணியை மேற்கொண்டனர்.
பொதுமக்களிடையே பசுமை சூழல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி மாணவர்கள் பிரசாரம் செய்தனர். உதவி திட்ட அலுவலர் பிரபு, முன்னாள் மாணவர் ரவி மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.