ADDED : அக் 05, 2025 11:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் வால்டர் ஸ்கடர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் அய்யந்தோப்பில் முகாம் நடந்தது.
தொடர்ந்து, 7 நாட்கள் நடந்த முகாமில், கிராம தெருக்களை சுத்தம் செய்தல், மரக்கன்று நடுதல், மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
முகாம் நிறைவு நாளில், பள்ளி தலைமையாசிரியர் ஆர்ம்ஸ்ராங் தலைமை தாங்கினார். நகராட்சி கவுன்சிலர் திருமகள் முன்னிலை வகித்தார்.
முகாமில் பள்ளி உதவி தலைமையாசிரியர் மோகன், என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலர் வின்ஸ்டன்மார்க், உதவி திட்ட அலுவலர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.