ADDED : பிப் 22, 2026 05:00 AM

மயிலம்: மயிலம் அடுத்த செண்டூர் கிராமத்தில் மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை அறிவியல் கல்லுாரி சார்பில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் துவங்கியது.
நிகழ்ச்சிக்கு, மயிலம் பொம்புர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கி மரக்கன்று நட்டு வைத்தார். கல்லுாரி செயலாளர் ராஜிவ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், ஊராட்சி தலைவர் முருகன், திருவள்ளுவர் பல்கலைக்கழக நாட்டு நல பணிக்கிட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயானந்த் பேசினர்.
மயிலம் முன்னாள் சேர்மன் தசரதன், துணைச் சேர்மன் புனித ராமஜெயம், துணைத் தலைவர் கிரிஜா வேலாயுதம் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஏழு நாட்கள் நடைபெற உள்ள இம்முகாமில் முகாமில் சுற்றுச்சூழல், தொழில் முனைவோர், சுகாதாரம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் துாய்மைப் பணிகளையும் மேற்கொள்ள உள்ளனர்.
திட்ட அலுவலர் வீரமுத்து நன்றி கூறினார்.

