/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெல்லும் தமிழ் பெண்கள் தி.மு.க., பயிற்சி கூட்டம்
/
வெல்லும் தமிழ் பெண்கள் தி.மு.க., பயிற்சி கூட்டம்
வெல்லும் தமிழ் பெண்கள் தி.மு.க., பயிற்சி கூட்டம்
வெல்லும் தமிழ் பெண்கள் தி.மு.க., பயிற்சி கூட்டம்
ADDED : பிப் 22, 2026 04:59 AM

விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், 'வெல்லும் தமிழ்ப்பெண்கள்' பயிற்சி கூட்டம் நடந்தது.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மகளிரணி பெண்களுக்கு ஆலோசனை வழங்கினார். விழுப்பரம் சட்டசபை தொகுதி மேற்பார்வையாளர் துரை சரவணன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கண்ணப்பன், மாரிமுத்து, பிரேமா குப்புசாமி முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மகளிரணி அமைப்பாளர் செல்வி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சந்திரலேகா, விழுப்புரம் தொகுதி வெல்லும் தமிழ்ப் பெண்கள் பொறுப்பாளர் சுஜானா லட்சுமிபதி ஆகியோர் பெண் நிர்வாகிகளுக்கு வெல்லும் தமிழ்ப் பெண்களின் பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
இதில், மகளிரணி நிர்வாகிகள், தினந்தோறும் 15 முதல் 20 வீடுகளில் உள்ள பெண்களை சந்தித்து, தி.மு.க., அரசின் சாதனைகளை தெளிவுபடுத்தி, அங்கு அரசின் சாதனை ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
நகர செயலாளர்கள் சக்கரை, வெற்றிவேல், ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, முருகவேல், பிரபாகரன், ராஜா, சந்திரசேகர், பேரூராட்சி செயலாளர் ஜீவா, கோலியனுார் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், வழக்கறிஞர் சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் சம்பத், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு உட்பட மகளிரணி நிர்வாகிகள், தொண்டரணி நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

