
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி நர்சிங் கல்லுாரியில் செவிலியர் தின விழா நடந்தது.
சிறப்பு விருந்தினர் கல்லுாரி செயலாளர் ஸ்ரீபதி பேசினார். கல்லுாரி முதல்வர் ஜெயலட்சுமி வரவேற்றார். மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள், மாணவிகள் கேக் வெட்டி செவிலியர் தினம் கொண்டாடினர். பேராசிரியர் சத்யா மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். துணை முதல்வர் மாலதி நன்றி கூறினார்.