/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அங்கன்வாடியில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா
/
அங்கன்வாடியில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா
ADDED : நவ 21, 2024 12:27 AM

விழுப்புரம், : விழுப்புரத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது.
விழுப்புரம் நகராட்சி வி.மருதூர் அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில், தாய்மார்களுக்கு 2-ம் கட்டமாக ஊட்டச்சத்து பெட்டகம் 129 குழந்தைகளின் தாய்மார்களுக்கு வழங்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மனோசித்ரா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக மேற்பார்வையாளர் கஸ்தூரி, தி.மு.க. நகர செயலாளர் சக்கரை, நகரமன்ற கவுன்சிலர்கள் புல்லட் மணி, மணவாளன், தீபா தென்றல்சம்பத், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கேசவன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்து, ம.தி.மு.க. நகர செயலாளர் சம்பந்தம், தி.மு.க. வார்டு செயலாளர் பிரபாகரன், வார்டு பிரதிநிதி முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

