/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மொபைல்போன் டவருக்கு எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகத்தில் மனு
/
மொபைல்போன் டவருக்கு எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகத்தில் மனு
மொபைல்போன் டவருக்கு எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகத்தில் மனு
மொபைல்போன் டவருக்கு எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகத்தில் மனு
ADDED : நவ 18, 2024 09:52 PM

விழுப்புரம் ; விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் ஷர்மிளா நகர், கணபதி நகர், பாலாஜி நகர் பகுதி மக்கள், தங்கள் பகுதியில் அமைத்துள்ள தனியார் மொபல்போன் டவரை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனு விபரம்:
கீழ்பெரும்பாக்கம் ஷர்மிளா நகர் பகுதியில், அனுமதியின்றி தனியார் நிறுவன மொபைல்போன் டவர் அமைப்பதை எதிர்த்தும், அந்த டவரை அகற்றக் கோரியும், கடந்த செப்டம்பர் 30ம் தேதி நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தோம். அதனை விசாரித்த அலுவலர்கள் டவரை அகற்றுவோம் என உறுதியளித்திருந்தனர்.
ஆனால், தற்போது வரை அகற்றவில்லை. 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள இப்பகுதியில், அனுமதி பெறாத, மொபைல்போன் டவரால் இப்பகுதியில் கதிர்வீச்சு தாக்கம் ஏற்படுத்தும்.
எனவே, குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மொபைல்போன் டவரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.