/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் அதிகாரி ஆய்வு
/
போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் அதிகாரி ஆய்வு
போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் அதிகாரி ஆய்வு
போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் அதிகாரி ஆய்வு
ADDED : டிச 24, 2025 06:37 AM
விழுப்புரம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் மண்டல அலுவலகத்தில் மேலாண் இயக்குநர் குணசேகரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அலுவலகத்தில் உள்ள சமையலறை, உணவருந்தும் கூடம், குடிநீர் தரம், சுற்றுப்புற சுழல், தோட்டங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, தரம் மேம்பட உரிய ஆலோசனை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அவர் கூறுகையில், 'டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் உழைக்க கூடியவர்கள். உணவருந்தும் உணவகம், உணவுகள் மிகுந்த எச்சரிக்கைேயாடும், தரத்தோடும் நாள்தோறும் பரிசோதித்து வழங்கப்படுகிறது.
ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பணியாற்றக் கூடிய இந்த அலுவலக வளாகங்கள் பொலிவோடு, பராமரிக்கப்பட்டு வண்ண பூச்செடிகளுடன் கூடிய பூங்காக்கள் உருவாக்கப்பட்டு நல்ல சுற்றுச்சூழலோடு திகழ்கிறது.
பணியாற்றும் ஒவ்வொருவரும் பாதுகாப்பான பஸ் இயக்கத்தை மனதில் கொண்டு, மக்கள் பணியை மகேசன் பணியாக, தமிழக அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் ஒவ்வொருவரும் பணியாற்றிட வேண்டும்' என்றார்.
துணை மேலாளர்கள் சிவக்குமார் (வணிகம்), அறிவண்ணல் (தொழில்நுட்பம்), உதவி மேலாளர்கள் முரளி (கட்டடம்), பிரபு (தொழில் உறவு) உடனிருந்தனர்.

