நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வீட்டின் முன்பு நின்றிருந்த முதியவர் இறந்தார்.
செஞ்சி அடுத்த வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால், 75; இவரது வீடு செஞ்சி - திண்டிவனம் பிரதான சாலையில் உள்ளது.
இவர், நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு தனது வீட்டின் முன்பு நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்த வேணுகோபால் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.