ADDED : மே 23, 2026 03:46 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: மருத்துவமனைக்குச் சென்ற மூதாட்டி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பெரியதச்சூர் அடுத்த மேல்கூடலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம், 70; விவசாயி.
இவரது மனைவி காந்திமதி, 65; உடல்நிலை பாதித்திருந்த காந்திமதி, நேற்று முன்தினம் அருகே உள்ள கேணிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், போலீசில் புகாரளித்தனர். பெரியதச்சூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
