/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து 4 குழந்தைகள் உட்பட 13 பேர் காயம்
/
ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து 4 குழந்தைகள் உட்பட 13 பேர் காயம்
ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து 4 குழந்தைகள் உட்பட 13 பேர் காயம்
ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து 4 குழந்தைகள் உட்பட 13 பேர் காயம்
ADDED : மே 06, 2025 05:15 AM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே ஆம்னி பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், 4 குழந்தைகள் உட்பட 13 பேர் காயமடைந்தனர்.
சென்னையில் இருந்து திருச்செந்துார் செல்லும் தனியார் ஆம்னி பஸ் நேற்று முன்தினம் இரவு 30 பயணிகளுடன் புறப்பட்டது. திருச்செந்துார் சார்லஸ், 40; டிரைவர் பஸ்சை ஓட்டிச் சென்றார். நேற்று அதிகாலை 12:30 மணிக்கு, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம், இருவேல்பட்டு இ.எம்.எஸ்., ரெட்டியார் பள்ளி அருகே பஸ் சென்றபோது, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பஸ்ஸில் சிக்கிக் கிடந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், லேசான காயமடைந்தவர்களை இருவேல்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பஸ்சில் பயணம் செய்த, தூத்துக்குடி மாவட்டம், சீனிவாசமுகபுரம் செல்வம் மகன் சாய்ராம், 7; திருச்செந்தூர் மாநாடு பகுதியை சேர்ந்த சிவகுமார் மகள் இயல்மதி, 7; முனிராஜா மகள் முவினா, 2; சென்னை, விருகம்பாக்கம் பொண்ணு ராஜா மகன் ஆர்யா, 2; உட்பட 13 நபர்கள் காயமடைந்தனர்.
புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பியோடிய டிரைவர் சார்லசை போலீசார் தேடி வருகின்றனர்.