/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆம்னி பஸ்கள் மோதல் 3 பேர் படுகாயம்
/
ஆம்னி பஸ்கள் மோதல் 3 பேர் படுகாயம்
ADDED : ஆக 11, 2025 11:04 PM
மயிலம்: மயிலம் அருகே 2 ஆம்னி பஸ்கள் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
மயிலம் அடுத்த செண்டூர் மின்வாரிய அலுவலகம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு 12:45 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் திடீரென பஞ்சர் ஆனது.
பஸ் டிரைவர் டயரை கழற்றி மாற்றிக் கொண்டிருந்தபோது, அதே மார்க்கத்தில் பின்னால் வந்த மற்றொரு ஆம்னி பஸ் பஞ்சரான பஸ் மீது மோதியது.
இந்த விபத்தில் டயரை மாற்றிக் கொண்டிருந்த சேத்துப்பட்டை சேர்ந்த டிரைவர் நாராயணமூர்த்தி, 44; பஸ் பயணிகள் பூந்தமல்லி பால்கனி, 68; அருப்புக்கோட்டை வேலன் மனைவி கவிதா, 42; ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.
நராயணமூர்த்தி திண்டிவனம் அரசு மருத்துவமனையிலும், மற்ற இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.
மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.