ADDED : செப் 08, 2025 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: புகையிலை பொருள் விற்ற பெட்டிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம், சேவியர் காலனியில் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
அங்குள்ள பெட்டிக்கடை ஒன்றில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் மகன் சகாயமேரி,53; என்பவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து 1 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவருக்கு அதை சப்ளை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.