ADDED : செப் 08, 2025 03:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: கற்பக விநாயகர் கோவில கும்பாபிேஷகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விக்கிரவாண்டி வ.ஊ.சி., நகரில் கற்பக விநாயகர் கோவில் பொதுமக்களால் புதுப்பிக்கப்பட்டு, வளாகத்தில் பாலமுருகன், துர்க்கை, மங்கள வராகி, ஐயப்பன், தட்சிணாமூர்த்தி, பார்வதி, பரமேஸ்வரர், மகாவிஷ்ணு, அரச மர விநாயகர், நாகர் போன்ற பரிவார மூர்த்திகளின் கோவில்கள் கட்டப்பட்டது.
இந்நிலையில், கும்பாபிேஷகம் நேற்று முன்தினம் காலை கணபதி ேஹாமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 10:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை முடிந்து கடம் புறப்பாடாகி காலை 10:22 மணிக்கு கோவில் கலசத்திற்கும், பரிவார மூர்த்திகளுக்கும் கண்ணன் குருக்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்தார். விழா ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் செய்தனர்.