/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இடிந்து விழும் நிலையில் வங்கி கட்டடம் விரைந்து அகற்ற கோரிக்கை
/
இடிந்து விழும் நிலையில் வங்கி கட்டடம் விரைந்து அகற்ற கோரிக்கை
இடிந்து விழும் நிலையில் வங்கி கட்டடம் விரைந்து அகற்ற கோரிக்கை
இடிந்து விழும் நிலையில் வங்கி கட்டடம் விரைந்து அகற்ற கோரிக்கை
ADDED : செப் 08, 2025 03:09 AM

விக்கிரவாண்டி: இடிந்து விழும் நிலையிலுள்ள பழமையான வங்கி கட்டடத்தை உடனடியாக இடித்து அப்புறபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
விக்கிரவாண்டி, மெயின்ரோடு கடைவீதியில் விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தனது சொந்த கட்டடத்தில் செயல்பட்டு வந்தது.
வங்கி கட்டடம் கட்டப்பட்டு, 35 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால், ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் வங்கி பின்புறமுள்ள இடத்தில் புதிய கட்டடம் கட்ட ஒப்பந்தம் விடப்பட்டது.
ஒப்பந்ததாரருக்கும், வங்கி நிர்வாகத்தினருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் புதிய கட்டடம் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
இதற்குள் வங்கியின் பழைய கட்டடம் பயன்படுத்தமுடியாத நிலைக்கு சென்றது. இதனால், தற்சமயம் வங்கி மாரியம்மன் கோவில் தெருவில் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, பழைய கட்டடத்தை இடித்து அகற்ற கடந்த 8 மாதங்களுக்கு முன், ஆய்வு நடந்தது. நிர்வாக சிக்கல் காரணமாக இந்த பணியும் கிடப்பில் போடப்பட்டது. தற்போது வங்கி கட்டடத்தின் முகப்பில், காரைகள் பெயர்ந்து இடிந்து விழுகின்றன.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'வங்கி முன்பு சிறு வியாபாரிகள் கடை வைத்துள்ளனர். மின்சார டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. மேலும் பல்வேறு குடியிருப்புகள் உள்ளன. கட்டடம் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தால் பெரிய அளவில் விபத்துகள் ஏற்படும். வங்கி உயர் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து உடனடியாக கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும், ' என்றனர்.