/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முன்விரோதம் காரணமாக வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; கோட்டகுப்பத்தில் ஒருவர் கைது
/
முன்விரோதம் காரணமாக வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; கோட்டகுப்பத்தில் ஒருவர் கைது
முன்விரோதம் காரணமாக வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; கோட்டகுப்பத்தில் ஒருவர் கைது
முன்விரோதம் காரணமாக வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; கோட்டகுப்பத்தில் ஒருவர் கைது
ADDED : டிச 19, 2024 01:02 AM

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே முன் விரோத தகராறு காரணமாக வீட்டின் மீது பெட்ரோல் கு்ண்டு வீசிய சம்பவத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், அனிச்சங்குப்பம் ஊராட்சி நம்பிக்கைநல்லூர் மீனவர் பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர். சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி திவினா, 27; இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த மாதம் 24ம் தேதி, அதே பகுதியை சேர்ந்த மீனவர் புகழேந்தி,48; என்பவர் தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக, கோட்டக்குப்பம் போலீசில் திவினா புகார் அளித்தார்.
போலீசார் விசாரித்து, புகழேந்தியை எச்சரித்து அனுப்பினர்.
இச்சம்பவத்தை அறிந்து கடந்த 12ம் தேதி ஊர் திரும்பிய சுரேந்தர், 13ம் தேதி புகழேந்தி வீட்டிற்கு சென்று, தன் மனைவியிடம் அத்துமீறி நடக்க முயன்றதை கேட்டு கண்டித்துள்ளார்.
அப்போது நடந்த தகராறில் புகழேந்தியின் மனைவி ஜோதியை கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஜோதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் மீது கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் சி.எஸ்.ஆர்., மட்டும் கொடுத்து அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1;45 மணியளவில் சுரேந்தர் வீட்டில் பயங்கர வெடி சத்தம் கேட்டடு, வெளியே வந்து பார்த்தனர்.
அப்போது, புகழேந்தியின் மகன் மதன், 23; அவரது நண்பர்கள் சிலர் வந்து, சுரேந்தர் வீட்டிலும், அவரது தம்பி சுமன், 23; என்பவரின் வீட்டிலும் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசியது தெரிய வந்தது.
இதில் சுரேந்தர் வீட்டில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலி, சுமன் வீட்டில் இருந்த இருசக்கர வாகனம், சைக்கிள் ஆகியன எரிந்து சேதமடைந்தன.
இந்த சம்பவம் குறித்து சுரேந்தர் கொடுத்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து புகேழந்தியை கைது செய்தனர். தலைமறைவான மதன் மற்றும் கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.