/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முன்விரோத தகராறு வழக்கில் ஒருவருக்கு 10 ஆண்டு சிறை
/
முன்விரோத தகராறு வழக்கில் ஒருவருக்கு 10 ஆண்டு சிறை
முன்விரோத தகராறு வழக்கில் ஒருவருக்கு 10 ஆண்டு சிறை
முன்விரோத தகராறு வழக்கில் ஒருவருக்கு 10 ஆண்டு சிறை
ADDED : அக் 01, 2024 06:08 AM
விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே முன்விரோத தகராறில் ஒருவரை கத்தியால் வெட்டிய நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த சிறுவள்ளிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கலியுகன், 40; அதே கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் என்கிற பாண்டு,38; இவர் மீது கொலை வழக்குகள் உள்ளன.
இவர்கள் இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு செப்., 9ம் தேதி, கலியுகனிடம் தகராறு செய்த மோகன்ராஜ் கத்தியால் அவரது தலையில் வெட்டினார்.
காயமடைந்த கலியுகன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
விக்கிரவாண்டி போலீசார், மோகன்ராஜ் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
இந்த வழக்கு, விசாரணை விழுப்புரம் எஸ்.சி., - எஸ்.டி., வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
விசாரணை முடிந்து, நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, குற்றம் சாட்டப்பட்ட மோகன்ராஜிற்கு, 10 ஆண்டு சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.