sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பைக் மீது ஆட்டோ மோதி ஒருவர் பலி

/

பைக் மீது ஆட்டோ மோதி ஒருவர் பலி

பைக் மீது ஆட்டோ மோதி ஒருவர் பலி

பைக் மீது ஆட்டோ மோதி ஒருவர் பலி


ADDED : ஆக 25, 2025 11:19 PM

Google News

ADDED : ஆக 25, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்:

திருவெண்ணெய்நல்லுார் அருகே பைக் மீது ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார். 4 பேர் காயமடைந்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் கலாம் மகன் யூசப், 21; பிரியாணி கடையில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன் தினம் இரவு 9:50 மணியளவில் அவரது தங்கை பிரியாவுடன் பைக்கில் கடலுார் - சித்துார் சாலையில் டி.எடப்பாளையம் பஸ் நிறுத்தம் வழியாக சென்றார்.

அப்போது எதிரே வந்த ஆட்டோ, யூசப் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில், யூசப், பிரியா, ஆட்டோ ஓட்டுநர் பைசல் ரகுமான், மற்றும் ஆட்டோவில் வந்த ஆசிப், சமீர் ஆகிய 5 பேரும் காயமடைந்தனர்.

உடன், 5 பேரையும் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் யூசப் இறந்தார். மற்ற நான்கு பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us