நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி அடுத்த புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருவன் மகன் எட்டியான்,54; இவர், நேற்று முன்தினம் மாலை மொபட்டில், புதுப்பேட்டை கிராமத்தில் இருந்து கணக்கன்குப்பத்திற்கு புறப்பட்டார். அந்தோணியார் நகர் அருகே சென்றபோது எதிரே கணக்கன்குப்பத்தில் இருந்து ராமு என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியது.
அதில் படுகாயமடைந்த எட்டியானை, அங்கிருந்தவர்கள் மீட்டு, அனந்தபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்வம் வழியில் இறந்தார்.
அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.