/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டி, பண்ருட்டியில் தலா ஒரு பள்ளி தரம் உயர்வு
/
விக்கிரவாண்டி, பண்ருட்டியில் தலா ஒரு பள்ளி தரம் உயர்வு
விக்கிரவாண்டி, பண்ருட்டியில் தலா ஒரு பள்ளி தரம் உயர்வு
விக்கிரவாண்டி, பண்ருட்டியில் தலா ஒரு பள்ளி தரம் உயர்வு
ADDED : ஆக 17, 2025 03:43 AM
விக்கிரவாண்டி, பண்ருட்டி தொகுதியில் தலா ஒரு நடுநிலைப் பள்ளி தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த, 2023 - 2024 தமிழக பட்ஜெட்டில், 21 அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பின், 2024 - 2025 பட்ஜெட்டில் அரசு பள்ளிகள் தரம் உயர்வு தொடர்பான அறிவிப்பு இடம் பெறவில்லை. நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டில், பள்ளிக்கல்வி துறை மானிய கோரிக்கையில், 38 பள்ளிகள் தரம் உயர்த்தப் படுவதாக அறிவிக்கப்பட்டது. மாநில அளவில், உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த, தலா ஒரு லட்சம் ரூபாய் முன்வைப்பு தொகை செலுத்தி, 150க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகள், 2 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கின்ற ன.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி காணை ஒன்றியம், கோழிப்பட்டு நடுநிலைப் பள்ளி, கடலுார் மாவட்டம், பண்ருட்டி தொகுதி, ஆ.நத்தம் நடுநிலைப் பள்ளி, திருவண்ணாமலை தொகுதி, மேல்செட்டிப்பட்டு நடுநிலைப்பள்ளி உட்பட 14 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
-நமது நிருபர்-.