/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சேடன்குட்டையில் ைஹமாஸ் மின்விளக்கு திறப்பு விழா
/
சேடன்குட்டையில் ைஹமாஸ் மின்விளக்கு திறப்பு விழா
ADDED : பிப் 16, 2025 03:33 AM

திண்டிவனம் : திண்டிவனம் சேடன்குட்டை பகுதியில் எம்.பி., நிதியில் அமைக்கப்பட்டுள்ள ைஹமாஸ் மின்விளக்கை சவுமியா அன்புமணி துவக்கி வைத்தார்.
திண்டிவனம், 11வது வார்டு, சேடன்குட்டை பகுதியில் ராஜ்ய சபா எம்.பி., அன்புமணியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.7 லட்சம் செலவில், சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே ைஹமாஸ் மின்விளக்கு அமைக்கப்பட்டது.
இதை பசுமை தாயகம் அமைப்பின் மாநில தலைவர் சவுமியா அன்புமணி துவக்கி வைத்தார். விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ம.க., செயலாளர் ஜெயராஜ் தலைமையில் நடந்த நிகழ்ச்சிக்கு, பா.ம.க., கவுன்சிலர் ேஹமமாலினி முன்னிலை வகித்தார்.
இதில் மாவட்ட துணை செயலாளர் பால்பாண்டியன்ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பராயலு, மாநில வழக்கறிஞர் சமூக நீதிபேரவை பாலாஜி, மாவட்ட தலைவர் பாவாடைராயன், நகர செயலாளர் மணிகண்டன், முன்னாள் நகர செயலாளர் சண்முகம், வன்னியர் சங்கம் ரவி, சிறுபான்மை அணி பிச்சைமுகமது, குட்டிஜெகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.