/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
66 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
/
66 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
ADDED : பிப் 17, 2024 05:27 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் 66 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், காரீப் பருவத்தில் 2023-24ம் ஆண்டிற்கு, விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 45 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணைய நிறுவனம் மூலம் 21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் என 66 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த கொள்முதல் நிலையங்களில், மத்திய, மாநில அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஆதார விலை மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அதன்படி நெல் கிரேடு 'ஏ' தரத்துக்கு, குறைந்தபட்ச ஆதார விலையாக (குவிண்டால் ஒன்றுக்கு) 2,203 ரூபாய், ஊக்கத்தொகையாக 107 ரூபாய் என மொத்தம் 2,310 ரூபாய் வழங்கப்படும். நெல் பொது ரகத்துக்கு, குவிண்டாலுக்கு 2183 ரூபாய், ஊக்கத்தொகை 82 ரூபாய் என மொத்தம் 2,265 ரூபாய் வழங்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.