ADDED : மார் 10, 2024 07:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரம் அடுத்த தெளிமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நடந்தது.
இப்பள்ளியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தெளிமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு, லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.
தொடர்ந்து அப்பகுதி மற்றும் கோனுார் ஊராட்சியில் தலா 2 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மினி குடிநீர் தொட்டியையும் திறந்து வைத்தார்.
விழாவில் காணை ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நரசிம்மன், சீனிவாசன், மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஊராட்சி தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

