/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நந்தன் கால்வாய் ெஷட்டர்கள் திறப்பு
/
நந்தன் கால்வாய் ெஷட்டர்கள் திறப்பு
ADDED : அக் 14, 2024 09:52 PM
செஞ்சி : நந்தன் கால்வாய் அணைக்கட்டு ெஷட்டர்களை பொதுப்பணித் துறையினர் நேற்று திறந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், துறிஞ்சல் ஆற்றில் கீரனுாரில் உள்ள அணைக்கட்டில் இருந்து நந்தன் கால்வாய்க்கு தண்ணீர் வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சில நாட்களாக மழை பெய்வதால் துறிஞ்சல் ஆற்றின் அணைக்கட்டு நிரம்பி தண்ணீர் ஆற்றில் செல்கிறது.
நேற்று முன்தினம் இங்கு முன்னாள் சேர்மன் ரங்கநாதன் தலைமையில் ஆய்வு நடத்திய நந்தன் கால்வாய் குழுவினர் ஆற்றில் தண்ணீர் வீணாக சென்று வருவதாக புகார் தெரிவித்தனர். இது குறித்த செய்தி நேற்று 'தினமலர்' நாளிதழில் வெளியானது.
இதையடுத்து நேற்று காலை நந்தன் கால்வாய்க்கு தண்ணீர் வரும் ெஷட்டர்களை திருவண்ணாமலை மாவட்ட நீர்வளத் துறையினர் திறந்தனர்.
இதையடுத்து நந்தன் கால்வாயில் நீர் வரத்து துவங்கியுள்ளது. கனமழை பெய்யும்போது ஏரிகளுக்கு தண்ணீர் விரைவாக செல்ல வழி ஏற்பட்டுள்ளது.