/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு
/
விழுப்புரம் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு
விழுப்புரம் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு
விழுப்புரம் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு
ADDED : செப் 23, 2024 05:16 AM

விழுப்புரம், : விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா நடந்தது.
விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில், உட்கோட்ட காவல்துறை சார்பில் புதிய புறக்காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு காவல் நிலைய கட்டுப்பாட்டில், அங்கு புதிய புறக்காவல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் கல்பனா வரவேற்றார். ஏ.எஸ்.பி.,ரவீந்திரகுமார் குப்தா முன்னிலை வகித்தார். எஸ்.பி., தீபக் சிவாச் புதிய புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்து, அங்கு புதிதாக அமைக்கப்பட்ட சி.சி.டி.வி., கேமிரா கண்காணிப்பு மையத்தையும் பார்வையிட்டார்.
இந்த புதிய புறக்காவல் நிலையத்தில் ஒரு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தலைமையில், 2 போலீசார், 24 மணி நேரம் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவர். சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா மற்றும் போலீசார் பங்கேற்றனர்.