/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரேஷன் கடை, அங்கன்வாடி கட்டடங்கள் திறப்பு
/
ரேஷன் கடை, அங்கன்வாடி கட்டடங்கள் திறப்பு
ADDED : ஜன 29, 2024 06:36 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியத்தில் புதிய ரேஷன் கடை, அங்கன் வாடி மைய கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது.
விக்கிரவாண்டி ஒன்றியத்தில் 38.77 லட்சம் ரூபாய் மதிப்பில் எசாலம், பனப்பாக்கத்தில் புதிய ரேஷன் கடை, தொரவியில் அங்கன் வாடி கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி திறந்து வைத்தார்.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, துணை சேர்மன் ஜீவிதா ரவி முன்னிலை வகித்தனர். கூட்டுறவு துணை சார் பதிவாளர் ராஜகுமாரன் வரவேற்றார். பி.டி.ஓ.,க்கள் சுமதி, முபாரக் அலி பேக், ஒன்றிய பொறியாளர் இளையராஜா, செயலாளர்கள் வேம்பி ரவி, ரவிதுரை, ஜெயபால், மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன்.
ஊராட்சி தலைவர்கள் கனிமொழி, பூவராகவன், சங்கர், கண்காணிப்பு குழு எத்திராசன், கலை இலக்கிய அணி ராஜசேகர், கலைச்செல்வன், தொழில் நுட்ப அணி சாம்பசிவம், இளைஞரணி பாரதி, மாவட்ட பிரதிநிதிகள் வேல்முருகன், வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.