/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேட்டுப்பாளையத்தில் ரேஷன் கடை திறப்பு
/
மேட்டுப்பாளையத்தில் ரேஷன் கடை திறப்பு
ADDED : செப் 30, 2024 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டமங்கலம்: கண்டமங்கலம் ஒன்றியம், எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்தில் 12 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, ஊராட்சி தலைவர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். கண்டமங்கலம் பி.டி.ஓ.,கள் மணிவண்ணன், சிவக்குமார், ஊராட்சி துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய சேர்மன் வாசன் ரேஷன் கடையை திறந்து வைத்து, விற்பனையை துவக்கி வைத்தார்.
தி.மு.க., ஒன்றிய துணைச் செயலாளர் குமணன், ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் புருஷோத்தமன், நெசவாளர் அணி அமைப்பாளர் ரஜினி, நிர்வாகிகள் பாரத், வடமலை உட்பட பலர் பங்கேற்றனர்.