sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

திண்டிவனம், செஞ்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் 'சைலண்ட் மோடில்' எதிர்கட்சிகள்

/

திண்டிவனம், செஞ்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் 'சைலண்ட் மோடில்' எதிர்கட்சிகள்

திண்டிவனம், செஞ்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் 'சைலண்ட் மோடில்' எதிர்கட்சிகள்

திண்டிவனம், செஞ்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் 'சைலண்ட் மோடில்' எதிர்கட்சிகள்


ADDED : செப் 23, 2025 07:35 AM

Google News

ADDED : செப் 23, 2025 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மக்களுக்கான திட்டங்களையும், அடிப்படை வசதிகளையும் செய்வதில் ஆளும் கட்சி சுணக்கமாக இருக்கும் போது, எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய கடமை எதிர் கட்சிகளுக்கு உண்டு.

விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் எதிர்கட்சிகள், கூட்டணி கட்சியை போல் சைலண்ட் மோடில் இருப்பதால் மாவட்டத்திற்கு வரவேண்டிய பல புதிய திட்டங்கள் வராமலும், அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமலும், துவங்கிய திட்டங்கள் முழுமையடையாமலும் அறைகுறையாக உள்ளன.

திண்டிவனத்தில் செல்படுத்தப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்திற்காக உடைக்கப்பட்ட சாலைகளை 2 ஆண்டுகளாக புதுப்பிக்காமல் சாலைகள் குண்டும். குழியுமாக உள்ளன. புதிய பஸ் நிலைய பணிகளை முடித்து திறப்பு விழா நடத்துவதில் ஆளும் கட்சி ஆர்வம் காட்டாமல் உள்ளது. பழை பஸ் நிலையத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு டெண்டர் விட்டும் பணிகள் துவங்கவில்லை. இங்கு ஆளும் கட்சி கவுன்சிலர்கள் கூட எதிர்கட்சியாக செயல்படுகின்றனர். எதிர்கட்சியினர் அமைதி காக்கின்றனர்.

செஞ்சியில் குடிநீர் குழாய்கள் பதிக்க உடைக்கப்பட்ட சாலைகளை புதுப்பிக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் திட்டம் முழுமையடையாமல் உள்ளது. நந்தன் கால்வாய்க்கு 309 கோடி ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்து ஓராண்டு முடிந்த நிலையில் இதுவரை நிதி ஒதுக்க வில்லை.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆளும் கட்சியினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு விவசாயிகளிடம் மூட்டை ஒன்றுக்கு 30 ரூபாய் வரை அடாவடி வசூல் செய்கின்றனர்.

ஆளும் கட்சியின் தேர்தல் வாக்குறுதியான செஞ்சி கோட்டையை சுற்றலா மையமாக்குவது, படகு சவாரி விடுவது, சுற்றுலா அலுவலகம் திறப்பது உள்ளிட்ட திட்டங்கள் எதையும் ஆளும் கட்சி செயல்படுத்தவில்லை. கடந்த 4 மாதத்தில் மர்ம விலங்கு கடித்து இதுவரை 250க்கும் மேற்பட்ட ஆடுகளும், 20க்கும் மேற்பட்ட கன்று குட்டிகளும் இறந்தன.

2008ம் ஆண்டு துவங்கப்பட்ட திண்டிவனம் - திருவண்ணாமலை இடையிலான ரயில்வே திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படாமல் திட்டம் முடங்கியுள்ளது. இது போல் ஏராளமான திட்டங்கள் முடங்கிக் கிடப்பது குறித்து பிரதான எதிர்கட்சிகளான அ.தி.மு.க.,வும், பா.ம.க.,வும் குரல் கொடுக்கவில்லை. ஆளும் கட்சியின் கூட்டணி கட்சி போல் எதிர்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

எதிர் கட்சி பொது கூட்டங்களிலும் உள்ளூர் பிரச்சனை பற்றி பேசாமல், தி.மு.க., தலைமையை மட்டும் கடுமையாக திட்டி பேசி வருகின்றனர். மறைந்த அ.தி.மு.க., பொது செயலாளர் ஜெ., எதிர் கட்சியாக இருந்த போது செஞ்சியில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது.

இதற்காக அ.தி.மு.க., தலைமை போராட்டம் அறிவித்து போராட்டம் நடத்தியது. இதன் பிறகு இப்பிரச்சனைக்கு ஆளும் கட்சி தீர்வு கண்டது. கடந்த நான்கரை ஆண்டில் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் பிரதான எதிர் கட்சிகள் உள்ளூர் பிரச்சனையில் கவனம் செலுத்தாமல் உள்ளனர். இதனால் துவங்கிய வேலைகள் முழுமையடையாமலும், புதிய திட்டங்களுக்கான அறிவிப்பு வராமலும் உள்ளது.

தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சியை குறை சொல்லி ஓட்டு கேட்டு வருதற்கு முன், எதிர்கட்சிகள் கடமையை உணர்ந்து செயல்பட்டால் மக்களுக்கான பிரச்னைகள் தீர்வதுடன், புதிய திட்டங்களுக்கான அறிவிப்பு வருவதற்கும் வாய்ப்புள்ளது.






      Dinamalar
      Follow us