/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேர்க்கடலைக்கு குறைந்த விலை நிர்ணயத்திற்கு எதிர்ப்பு! திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்
/
வேர்க்கடலைக்கு குறைந்த விலை நிர்ணயத்திற்கு எதிர்ப்பு! திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்
வேர்க்கடலைக்கு குறைந்த விலை நிர்ணயத்திற்கு எதிர்ப்பு! திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்
வேர்க்கடலைக்கு குறைந்த விலை நிர்ணயத்திற்கு எதிர்ப்பு! திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்
ADDED : மே 03, 2024 05:40 AM

திண்டிவனம்: திண்டிவனம் மார்க்கெட் கமிட்டியில் வேர்க்கடலை பயிருக்கு குறைந்த விலை நிர்ணயம் செய்ததாக, விவசாயிகள் நடத்திய சாலை மறியலால், செஞ்சி சாலையில் போக்குவரத்து பாதித்தது.
திண்டிவனம், செஞ்சி ரோட்டில் மார்க்கெட் கமிட்டி இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் நெல், வேர்க்கடலை பனிப்பயிறு, உளுந்து உள்ளிட்ட பயிர்களை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர்.
இதே போல் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று மார்க்கெட் கமிட்டிக்கு, அதிகளவில் வேர்க்கடலை பயிர்களை விற்பனைக்குக் கொண்டு வந்தனர்.
இதற்கு மார்க்கெட் கமிட்டி மூலம் வேர்க்கடலை பயிருக்கு ஆன்லைன் மூலம் நிர்ணயம் செய்யப்பட்ட விலை தெரிவிக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த 29 மற்றும் 30ம் தேதி மார்க்கெட் கமிட்டியில் வேர்க்கடலை பயிருக்கு அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டதாக புகார் தெரிவித்தனர்.
இதனை கண்டித்து, நேற்று மதியம் 12:30 மணியவில் விவசாயிகள் திண்டிவனம் - செஞ்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதித்தது.
தகவலறிந்து வந்த ரோஷணை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததைத் தொடர்ந்து, 1:30 மணியளவில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம், மாவட்ட விற்பனைக்குழு செயலாளர் சந்துரு பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் வேர்க்கடலை பயிருக்கு தேசிய வேளாண்மை சந்தை மின்னணு வர்த்தக அமைப்பு (இ-நாம்) மூலம் ஆன்லைனில் வியாபாரிகளால் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
வேர்க்கடலை பயிரில் விலை நிர்ணயம் செய்ததில் திருப்பதி இல்லாத விவசாயிகள், மார்க்கெட் கமிட்டியில் மூட்டைகளை வைத்துவிட்டு, மீண்டும் நாளைக்கு விலை நிர்ணயம் செய்யும் போது, அதன் அடிப்படையில் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
அதன்பேரில், 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று கொண்டு வந்த வேர்க்கடலை மூட்டைகளை மார்க்கெட் கமிட்டியில் வைத்து விட்டனர். மற்ற விவசாயிகள் நேற்று நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கு ஒப்புதல் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் தரப்பில் கூறுகையில், 'கடந்த 29 மற்றும் 30ம் தேதி வேர்க்கடலை மூட்டைக்கு (80 கிலோ) அதிக பட்சமாக 8,122 ரூபாயும், குறைந்தபட்சமாக 5,950 ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. சாரசரி விலை 7,560 ரூபாய். நேற்று அதிக பட்ச விலையாக 7,981 ரூபாயும், குறைந்த பட்ச விலையாக 5,899 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டது. சராசரி விலை 7,540 ரூபாய் ஆகும்.
நேற்று கமிட்டிக்கு 700 மூட்டை வேர்க்கடலை பயிர் வந்தது. ஆன்லைன் மூலம் வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்கின்றனர். இதில் கமிட்டி நிர்வாகம் தலையீடு இல்லை' என தெரிவித்தனர்.