/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தனியார் கெஸ்ட் ஹவுஸ் மீண்டும் திறக்க எதிர்ப்பு
/
தனியார் கெஸ்ட் ஹவுஸ் மீண்டும் திறக்க எதிர்ப்பு
ADDED : ஜன 12, 2025 04:08 AM

கோட்டக்குப்பம் : கோட்டக்குப்பத்தில் மூடப்பட்ட தனியார் கெஸ்ட் ஹவுசை மீண்டும் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொது மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட ரஹமத் நகர் உசேன் தெருவில் தனியார் கெஸ்ட் அவுஸ் உள்ளது. மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு மத்தியில் இடையூறாக இருந்ததால், அந்த கெஸ்ட் ஹவுசை மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டங்கள் நடத்தினர். அதன் காரணமாக அந்த கெஸ்ட் ஹவுஸ் மூடப்பட்டது.
இந்நிலையில் சமீப காலமாக மீண்டும் அந்த கெஸ்ட் ஹவுஸ் திறக்கப்பட்டுள்ளது. இதையறிந்த அப்பகுதி மக்கள், முஸ்லிம் சமூகத்தினர் ஜமாத்தார்களுடன் நேற்று இரவு 9;30 மணிக்கு ஒன்று திரண்டனர். கெஸ்ட் ஹவுஸ் உள்ளே புகுந்து பொருட்களை சேதப்படுத்த முயற்சித்தனர்.
கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து, பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகளை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர்.