/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓ.பி.எஸ்., அணி உரிமை மீட்புக்குழு ஆலோசனை
/
ஓ.பி.எஸ்., அணி உரிமை மீட்புக்குழு ஆலோசனை
ADDED : பிப் 02, 2024 11:51 PM

விழுப்புரம் -விழுப்புரம் மாவட்ட ஓ.பி.எஸ்., அணி தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
விழுப்புரத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி., ஏழுமலை தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன், துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பாண்டியன், கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி, மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் கதிரவன், புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஓம்சக்தி சேகர் முன்னிலை வகித்தனர். திண்டிவனம் நகர செயலாளர் தம்பி ஏழுமலை வரவேற்றார்.
கூட்டத்தில், கட்சி ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார்.
மாநில மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் யோகேஸ்வரன், மாவட்ட அவைத் தலைவர் ஜெயராமன், துணைச் செயலாளர் டாக்டர் கலைச்செல்வம், ஜெ. பேரவைச் செயலாளர் பாலமணிகண்டன்.
தகவல் தொழில்நுட்ப அணி சரவணன், மருத்துவரணி செயலாளர் டாக்டர் தம்பிதுரை, முன்னாள் மாவட்ட சேர்மன் அலமேலு வேலு, ஒன்றிய செயலாளர் முத்துராமன், தனுசு, ராமச்சந்திரன், கஜேந்திரன், கணேசன், நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

