/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எங்க ஏரியா... உள்ள வராதே... திண்டிவனம் எம்.எல்.ஏ., ஆதங்கம்
/
எங்க ஏரியா... உள்ள வராதே... திண்டிவனம் எம்.எல்.ஏ., ஆதங்கம்
எங்க ஏரியா... உள்ள வராதே... திண்டிவனம் எம்.எல்.ஏ., ஆதங்கம்
எங்க ஏரியா... உள்ள வராதே... திண்டிவனம் எம்.எல்.ஏ., ஆதங்கம்
ADDED : ஏப் 22, 2025 04:46 AM

திண்டிவனத்திலிருந்து கடவாம்பாக்கம், ஒலக்கூர் என 2 வழித்தடங்களில், புதிய டவுன் பஸ்கள் துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது.
அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ., மஸ்தான் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தி.மு.க.,வைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திண்டிவனம் தொகுதியில் நடந்த விழாவிற்கு, அ.தி.மு.க., வைச் சேர்ந்த தொகுதி எம்.எல்.ஏ., அர்ஜூனனுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.
நிகழ்ச்சி குறித்து தெரிந்து கொண்ட அர்ஜூனன் எம்.எல்.ஏ., தன்னுடைய தொகுதியில் நடைபெறும் விழாவில் தனக்கு முறையாக தகவல் தெரிவிக்காமல், தி.மு.க.,வைச் சேர்ந்த வேறு தொகுதி எம்.எல்.ஏ., துவக்கி வைத்ததற்கு அர்ஜூனன் எம்.எல்.ஏ., அதிருப்தி அடைந்துள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கையில், 'திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ள எனக்கு அரசு நிகழ்ச்சி குறித்த முறையான தகவல் மாவட்ட நிர்வாகத்திடமிருந்து தெரிவிப்பதில்லை. சட்டசபையில் நான் கோரிக்கை வைத்து அந்த திட்டம் நிறைவேறினால், அந்த திட்ட துவக்க விழாவிற்கு கூட என்னை அழைப்பதில்லை. இதுபற்றி நான் கலெக்டரிடம் பல முறை புகார் தெரிவித்தும், தொடர்ந்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட என்னை புறக்கணித்து வருகின்றனர்.
திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக நான் இருக்கும் போது, செஞ்சி தொகுதியைச் சேர்ந்த தி.மு.க., எம்.எல்.ஏ., திண்டிவனத்திலிருந்து செல்லும் புதிய வழித்தடத்தை கொடியசைத்து துவக்கி வைப்பது எந்த விதத்தில் நியாயம் என தெரியவில்லை' என தெரிவித்துள்ளார்.