/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மனைவி, தாய் உட்பட மூவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் மது குடிப்பதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்

ADDED : ஜூலை 13, 2025 12:51 AM

விக்கிரவாண்டி:மது குடித்ததை தட்டிக்கேட்ட புது மனைவி, தாய் மற்றும் உறவினரை துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வாக்கூரை சேர்ந்தவர் தென்னரசன், 28. இவருக்கும், திண்டிவனத்தை சேர்ந்த லாவண்யா, 26, என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது.
தென்னரசன் தினமும் மது குடித்து வந்தார். இதனால், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. லாவண்யா பெற்றோர், நேற்று முன்தினம் வந்து சமரசம் செய்து சென்றனர்.
ஆத்திரம் தீராத தென்னரசன், நேற்று காலை, 11:00 மணிக்கு மது குடித்து வந்து, ஏர் கன் என்ற துப்பாக்கியால் மனைவியை சுட்டார்.
அவரை தடுத்த தாய் பச்சையம்மாளையும் சுட்டார். அலறல் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டில் குடியிருக்கும் தென்னரசன் சித்தப்பா மகன் சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் கார்த்திக், 28, என்பவரையும் சுட்டார்.
அப்பகுதி மக்கள், தென்னரசனை மரத்தில் கட்டி வைத்து, விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேரும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உறவினர் கார்த்திக், மனைவி லாவண்யா ஆகியோரது தலையில் இரு இடங்களில் குண்டு பாய்ந்துள்ளதால், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விழுப்புரம் எஸ்.பி., சரவணன் சம்பவ இடத்தில் விசாரித்தார். தென்னரசன் வீட்டில் இருந்து நான்கு ஏர் கன் துப்பாக்கிகளை, போலீசார் பறிமுதல் செய்தனர். அவருக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.